Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த தலைமையாசிரியர்”… போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு…!!!!!

2 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் சரிவர பள்ளிக்கு வரவில்லை. மேலும் இவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்த குமாருக்கு புகார் சென்றதையடுத்து அவர் மாணவிகளிடம் விசாரணை செய்தார்.

இதையடுத்து மாணவிகள் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் 59 வயதான வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |