Categories
தேசிய செய்திகள்

2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் திடீர் இறப்பு…. கெட்டுப்போன உணவுதான் காரணமா?…. போலீஸ் விசாரணை….!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உறைவிடப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 2 மாணவா்கள் நேற்று உயிரிழந்தனா். அதாவது கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 2 மாணவர்களும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

தற்போது நாசிக் மாவட்ட மருத்துவமனையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதனிடையில் இறந்த மாணவா்கள் பிவாண்டியைச் சோ்ந்த ஹா்ஷல் போயிா் (23), நாசிக்கைச் சோ்ந்த முகமது சுபைா் ஷேக் (10) ஆவா். அப்பள்ளியில் மொத்தம் 120 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்போது மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Categories

Tech |