17 வயது சிறுமி ஒருவர் லாமிச்சானே மீது இரண்டு முறை பலாத்காரம் செய்ததாக புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் கௌஷாலா பெருநகர காவல் வட்டத்தில் லாமிச்சானே மீது இரண்டு முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவிடம் நேபாள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்த குற்றம் நடந்ததாக போலீஸார் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். அந்த இளம்பெண் தான் அந்த கிரிக்கெட் வீரரின் ரசிகை என்றும், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் அவருடன் பேசுவதாகவும் கூறினார். முதலில் லாமிச்சானே தான் என்னை சந்திக்கவேண்டும் என்று ஆவலுடன் சொன்னார். இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
காத்மாண்டு மாவட்ட காவல் துறையின் தலைவர் பாரத் பகதூர் போஹோரா, நகரின் கவுஷாலாவில் உள்ள காவல் வட்டம் புதன்கிழமை புகாரைப் பதிவு செய்ததாகக் கூறினார். காத்மாண்டு பள்ளத்தாக்கு காவல்துறை அலுவலகத் தலைவர் ரவீந்திர பிரசாத் தனுக் கூறுகையில், “இதுபோன்ற தீவிரமான சம்பவங்களுக்கு போலீசார் அதிக கவனம் செலுத்தி விசாரணை நடத்துவார்கள். உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் சிறுயை சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம், விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்றார்.
லமிச்சானே முன்பு நேபாள 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்தார், முதலில் 2016 இல் ஆசியக் கோப்பையின் போது மற்றும் 2017 இல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கும் கேப்டனாக இருந்தவர் லமிச்சானே. மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.