கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது லேட்டஸ்டாக 2 போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தக்கூடிய அம்சத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப்-ன் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துவோர், 2 மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
# உங்களது முதன்மை மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியே திறக்க வேண்டும்.
# மேல் வலது மூலையில் தெரியும் 3 புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்யவேண்டும்.
# “Linked devices” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின் “link a devices” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தபிறகு, திரையில் கியூஆர் கோட் காண்பிக்கும்.
தற்போது 2ஆம் நிலை மொபைலில் திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள 3 புள்ளிகள் கொண்ட மெனு ஐகானை கிளிக் செய்யவும்.
# Linked devices என்ற ஆப்ஷனை மீண்டுமாக கிளிக் செய்யவும்.
# இந்நிலையில் முதன்மை தொலைபேசியில் கிடைக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யவேண்டும்.