Categories
உலக செய்திகள்

2-ம் எலிசபெத் மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து…. செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம்…. சமூக ஊடகங்களில் வெளியாகும் புதிர் செய்திகள்….!!

மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக பிரித்தானியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

2-ம் எலிசபெத் மகாராணியார், Corgi என்று அழைக்கப்படும் ஒருவகை குள்ளமான நாய்களை வைத்திருந்தார். அவருக்கு சொந்தமாக 30 நாய்கள் இருந்தன. இந்நிலையில், மகாராணியார் வைத்திருந்த அதே வகை நாய்களை வைத்திருக்கும் பலர், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். மகாராணியாரின் மறைவுக்காக தங்கள் செல்லப்பிராணிகளும் துக்கம் அனுசரிப்பதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.

சிலர், தங்கள் செல்லபிராணிகள் முன்பைவிட இப்போது தங்களிடம் அதிக நெருக்கம் காட்டுவதாகவும், அதிக நேரம் தங்கள் மடியிலேயே படுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள். இன்னொருவர் ஒரு படி மேலே போய், என் செல்ல நாய் மகாராணியாரின் மறைவால் சோகமானது, ஆனால், இளவரசர் வில்லியமும் கேட்டும் வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் ஆகியுள்ளதால் அது மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது என்று கூறியிருக்கின்றார். ஆனால், சமூக ஊடகங்களில் இந்த செய்திகளைப் படித்த சிலர், இதுபோன்ற ஆட்கள் இந்த உலகத்தில் இருக்கின்றார்களா என்று கூறுகிறார்கள்.

Categories

Tech |