இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் ஒரு பதிவு மூலம் பதில் அளித்துள்ளார் மேக்னா ராஜ்.
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னா ராஜ் அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த சூழலில் 32 வயதான நடிகை மேக்னோராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மேக்னராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, மனது என்ன சொல்லும். எனது கணவர் இறந்த பின்பு என்னுடைய குழந்தையை வளர்ப்பது அவனது எதிர்காலம் பற்றி தான் சிந்தித்து வருகின்றேன் ஒரு சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் தெரிவிக்கின்றார்கள். ஒரு சிலர் சிரஞ்சீவி சர்ஜாவின் நினைவில் வாழும் படி கூறுகின்றார்கள் எனக் கூறினார்.
இந்த நிலையில் தற்பொழுது இணையத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மகனின் பெயர்களை டாட்டூ வரைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கின்றார். இதன்மூலம் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்பதை இப்புகைப்படத்தின் மூலம் மறைமுகமாக பதில் அளித்து இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.