Categories
மாநில செய்திகள்

“2 ம் முறையாக என்னை தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி”…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு…!!!!

திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி ஆர் பாலு, போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறவியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக என்னை தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தமிழக உரிமைகளைக் காப்பதற்காக எந்நாளும் உழைப்பேன் என பதிவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |