Categories
மாநில செய்திகள்

+2 ரிசல்ட்: மாணவர்களின் செல்போனுக்கு…. மெசேஜாக வந்துவிடும் – அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு +2 ரிசல்ட் வெளியிடப்பட்டது.

சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்ற,ம்  பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்ச பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |