Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு இட்லி….. மூதாட்டியின் சிறப்பான செயல்…. பசியாறும் ஏழை மக்கள்…!!

மூதாட்டி ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 ரூபாய்க்கு இட்லி, பூரியை விற்பனை செய்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான கந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பூரி, இட்லி தலா 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு சுவையான சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியை ஆவுடையம்மாள் வழங்குகிறார். ஏராளமானவர்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று இட்லி, பூரியை வாங்கி செல்கின்றனர். பெயர் பலகை இல்லை என்றாலும் இவரது கடையை அம்மா உணவகம் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அழைக்கின்றனர்.

இதுகுறித்து ஆவுடையம்மாள் கூறும் போது ஏழை மக்களின் பசியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் பூரி, இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தாலும் இட்லி பூரியின் விலையை நான் உயர்த்த போவது இல்லை. அதிகாலையிலேயே கண்விழித்து யாரையும் உதவிக்கு அழைக்காமல் நானே தனியாக அனைத்து வேலைகளையும் செய்து விடுவேன். இதற்காக வேறு எந்த திருவிழாக்களுக்கும் செல்வதில்லை என மூதாட்டி கூறியுள்ளார்.

Categories

Tech |