Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

 2 ரூபாய்க்கு டீ… வியாபாரியின்… வியப்பூட்டும் விற்பனை…மக்கள் வரவேற்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டீ கடை வியாபாரி ஒருவர் ஒரு டீயை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் என்ற பகுதியில் 30 வயதுடைய மணிவண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் சந்தப்பேட்டை அருகில் டீக்கடை ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சி தினங்களில் பண்டிகையின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் ஏதாவது ஒரு புதுமை செயலைச் செய்வார். அவ்வகையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரின் கடையில் ஒரு டீ யை பொதுமக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அனைத்து கடைகளிலும் ஒரு டீ 15 ரூபாய்க்கும், ஒரு காபி 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர் இரண்டு ரூபாய்க்கு ஒரு டீ விற்பனை செய்ததால் அவர் கடையில் காலை முதலில் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி மணிவண்ணன் கூறும்போது, “எனது கடையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.அதனால் ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் நிரந்தரமான வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு டீயை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்தேன்.

ஆனால் காலை 8 மணி முதல் பத்து மணி வரையில் மட்டுமே இந்த விற்பனை நடந்தது. ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் எனது கடைக்கு வாடிக்கையாளர்கள் சற்று குறைவாகவே வந்தனர்.அதனால் மேலும் கூடுதலாக மூன்று மணி நேரம் கூட்டி மதியம் ஒரு மணி வரையில் இந்த விற்பனை நடந்தது. அதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் நேற்று கடைக்கு வந்து டீ அருந்தினர். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |