Categories
அரசியல் சற்றுமுன்

2 ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைப்பற்றி ட்வீட் செய்யும் நெட்டிசன்கள்…குஷ்பூ குமுறல் …!!!

ஒரு டீவீட்டிற்கு இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப் போகிறேன் என வதந்தி பரப்புவதாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ  குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் குஷ்பூ தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வளவாக பங்கேற்பதில்லை. காங்கிரஸ் மேலிடம் குஷ்பூவை ஒதுக்குகிறது என்று முடிவுக்கு வந்த பாஜகவினர் குஷ்பூவை தங்கள் கட்சியில் இணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூட நடிகை குஷ்பூ போன்றவர்கள் பாஜகவில் இணைய வேண்டுமென அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர்.

குஷ்பூவின் பிறந்தநாளிற்கு பாஜகவினை சேர்ந்த ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.ஆனால் இவை எதற்கும் செவி சாய்க்காமல் மௌனம் சாதித்து வந்தார் குஷ்பூ. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்ற குஷ்பூ காங்கிரஸ் கட்சியில்  தனது நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கின்றார். மேலும் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணைய போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

Categories

Tech |