சிறப்பாக நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் முனைவோருக்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என கூறியுள்ளார். அதன்படி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகைகளை எடுத்து வருகிறது. இதன் முதல்கட்ட தொடக்கமாக தற்போது தொழில் முனைவோருக்கான மாநாடு நடந்துள்ளது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தொழில் தொடங்குவது, இடம் தேர்வு செய்வது, இடர்பாடுகளை களைவது போன்றவைகள் குறித்து விவாதம் செய்யப்பட்டது. இதில் குறிப்பாக மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி குறித்து தொழில் முனைவோர்கள் கேட்டனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என கூறியவுடன் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறினர்.
இவர்கள் 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றனர். இப்படி புதிதாக தொழில் தொடங்குவதன் மூலம் படித்த 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதன்பிறகு 10-ம் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறது. மேலும் ஐ.டி, பார்மா, ஆட்டோமொபைல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில் தொடங்குவதில் புதுச்சேரி அரசு மிக கவனமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.