ஓடிடி தளத்தில் முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 100 நாட்களுக்குள்ளாக 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்து இருக்கும் சூழ்நிலையில் பங்குச் சந்தையிலும் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக முன்னணியில் இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களை இழப்பது இதுவே முதல் முறையாகும்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில், ரஷ்யாவில் தன் சேவைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிறுத்தி இருந்தது. இதுவே சந்தாதாரர்கள் இழப்பு காரணமாக இருக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் இந்த காலாண்டில் 1.6பில்லியன் டாலராக உள்ள சூழ்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 25 % வீழ்ச்சியடைந்துள்ளது.