எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 2 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை இலவசமாக பெற முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி 45 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால் நீங்கள் 2 லட்சம் வரையிலான இலவசமான சலுகைகளை பெற முடியும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்போர் மட்டுமே இந்த சலுகைகளை பெற முடியும். மேலும்ரூபே டெபிட் கார்டு பயன் படுத்தவேண்டும். ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த கணக்கு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி முன்பு தொடங்கப்பட்டதா அல்லது பின்னர் தொடங்கப்பட்டதா என்பதை பொருத்து காப்பீடு தொகை வேறுபடும்.
2018 ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு முன் கணக்கு தொடங்கியவருக்கு ஒரு லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். 2018 ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு பின் கணக்கு தொடங்கியவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு கிடைக்கும். இந்த கணக்கு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு, வங்கிச் சேவை பெறாதவர்களும், வங்கி சேவைகள் வழங்குவதற்காக பிரதமர் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது எதுவும் தேவையில்லை. அடிப்படை வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. இத்துடன் எஸ்பிஐ வங்கி 2 லட்சம் வரை விபத்து காப்பீடும் இதற்கு இலவசமாக வழங்குகிறது.