விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.குச்சிபாளையம் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். அதே பணிமனையில் சிவதாஸ் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சிவதாஸ் குடும்ப செலவுக்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலையாவிடம் 2 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார்.
இதுவரை அந்த ரூபாயை பாலையாவுக்கு திருப்பி கொடுக்காமல் சிவதாஸ் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பாலையா வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.