Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 லட்ச ரூபாய் வழங்கப்படும்” சிறுவனுக்கு நடந்த கொடுமை…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயதுடைய விதவை  பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு  பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த  பெண்ணை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த  பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |