திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் 2-வது அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 42 பெண்கள் உட்பட 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 12,726 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி 690 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.