Categories
தேசிய செய்திகள்

2-வது டோஸ் தடுப்பூசி போட்டால்…. தனிமைப்படுத்தல் இல்லை…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 2 டோஸ்தடுப்பூசி போட்டிருந்தால் அவர்களை தனிமைப்படுத்த தேவையில்லை என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநில விமான நிலையங்களுக்கும் வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டு பதினைந்து நாட்களுக்குப் பின்னான ஆவணத்தை காட்டினால் அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |