Categories
தேசிய செய்திகள்

2-வது தடுப்பூசி போட்டு…. “எத்தனை நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் போடணும்”….?  மத்திய அரசு விளக்கம்….!!!

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்திய தடுப்பூசியை தான் பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது

இந்நிலையில் யாருக்கு, எந்த அடிப்படையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி,  இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு 39 வாரங்கள் கழித்து இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |