Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயது பெண்ணுடன் கவியரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்த கவியரசன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் ஏற்காடு காவல் நிலையத்தில் கவியரசன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கவியரசனை கைது செய்தனர்.

Categories

Tech |