ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோவிந்தனுக்கு வினுபிரியா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கோவிந்தனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது .தற்போது கோவிந்தன் சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் வேலை பார்க்கும் போது கோவிந்தனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணையே கோவிந்தன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக வேறு ஒருவர் மூலம் பிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்ததில் கோவிந்தனின் தந்தை ரவி, தாய் பாவனா ஆகியோர் இணைந்து அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது உறுதியானது. இதுகுறித்து பிரியா மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கோவிந்தன், அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி. வருகின்றனர்