Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தையை…. 60 வயது காம கொடூரனின் வெறிச்செயல்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…..!!!

சென்னையில் இரண்டு வயது குழந்தையை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் 15 வருடங்களாக டீக்கடை நடத்தி வரும் ஒருவருக்கு 2 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தை நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் 60 வயது முதியவர் ஒருவர் குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி சிறுமியின் தந்தைக்கு தெரிய வந்ததும், உடனே அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் முதியவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |