Categories
தேனி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக முடங்கி இருந்த தடுப்பணை கட்டும் பணி”…. மீண்டும் தொடக்கம்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!

ஆண்டிபட்டி அருகே தற்பொழுது சிமெண்ட் கலவையால் தடுப்பணை கட்டப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலை அடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை இருக்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே சென்ற 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் சிமெண்ட் கலவைக்கு பதிலாக செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

ஆனால் அந்த தடுப்பணை கட்டும் பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தார்கள். 2 வருடங்களாக தடுப்பணை பணிகள் முடங்கி கிடந்த நிலையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்கள். இதைத் தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் பேரில் 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தடுப்பணை கட்டும் பணி ஆனது தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. தற்பொழுது தடுப்பணையானது சிமெண்ட் கலவையால் கட்டப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Categories

Tech |