Categories
உலக செய்திகள்

“2 வருடங்களுக்குப் பின் மீண்டும்”… பேருந்து போக்குவரத்து இயக்கம்…. எங்கு தெரியுமா….?

இரண்டு வருடங்களுக்குப் பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரானா பெருந்தொற்றின்  காரணமாக உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கியது. உள்ளூர் சேவையை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து பேருந்து ரயில் மற்றும் விமான சேவையும் முடங்கி  இருந்தது. இந்த நிலையில் கொரோனா  குறைந்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. மேலும் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் கடந்து 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை கடந்த மே மாதம் 29ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பேருந்து போக்குவரத்து இரண்டு வருடங்களுக்கு பின் இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதுபற்றி வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் நேபாள நாடுகளின் எல்லையை கடந்து செல்லும் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.

இதற்காக வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து இன்று காலை டாக்கா கொல்கத்தா டாக்கா பேருந்து சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன், டாக்கா-கொல்கத்தா-டாக்கா, டாக்கா-அகர்தலா-டாக்கா, டாக்கா-சில்ஹெட்-ஷில்லாங்-கவுகாத்தி-டாக்கா, அகர்தலா-டாக்கா-கொல்கத்தா-அகர்தலா மற்றும் டாக்கா-குல்னா-கொல்கத்தா-டாக்கா போன்ற  ஐந்து எல்லை கடந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |