Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பின் மீண்டும்”… ஈரோடு பாலக்காடு ரயில் இயக்கம்… செம ஹேப்பியில் ரயில் பயணிகள்…!!!!!!!

ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு சென்றுள்ளது. இதேபோல் மறு மார்க்க பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7:10 மணிக்கு வந்தடைகின்றது. இந்த ரயில் தினமும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரானா  பெருந்தொற்று காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் பின் பல்வேறு ரயில்கள் மீண்டும் விடப்பட்டு வந்தது. ஆனால் ஈரோடு பாலக்காடு ரயில் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் ஈரோட்டில் இருந்து திருப்பூர் கோவைக்கு வேலை சென்று வந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஈரோடு பாலக்காடு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் ஈரோடு பாலக்காடு ரயில் மீண்டும் இயக்கப்படும் தெற்கு  ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று காலை அந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர் கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதனை முன்னிட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரயில்வே நிர்வாகத்திற்கு அவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் கே என் பாஷா முகமது அர்ஷத் செய்யும் ராஜேந்திரன் ஜவஹர் அலி போன்ற பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |