இரண்டு வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் போக்குவரத்து நேற்று முன்தினம் முதல் இயங்கியது. காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5 .15 மணிக்கு கிளம்பி விழுப்புரம் ரயில் நிலையத்தை 9:10 மணிக்கு வந்தடையும்.
இதே போன்று மறுமார்க்கத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு கிளம்பியது. இந்த ரயில் ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம், அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, தண்டரை, போளூர், அகரம்சிப்பந்தி, துறிஞ்சாபுரம், மாதிரிமங்கலம், சேதாரம்பட்டு, ஆரணி சாலை, கண்ணமங்கலம், ஒன்னுபுரம், பெண்ணாத்தூர், வாணியம்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், வேலூர் டவுன் வழியாக காட்பாடி ரயில் நிலையத்தை இரவு 11.05 மணிக்கு சென்றடையும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து இயங்கியதால் பயணிகள் மிகவும் ஆனந்தம் அடைந்தார்கள்.