ஒகேனக்கல் அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஓகேனக்கல்அருவி. இது தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், ஒகேனக்கல் அருவி சேதமடைந்ததாலும் மற்றும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி கோரி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி அனுமதி அளித்துள்ளார். இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.