கொரோனா பரவல் குறைந்ததால் நாகராஜா கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் புகழ்பெற்ற நாகராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கடந்த 2 வருடங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சாமி செய்வதற்காக சென்றுள்ளனர். இந்த கோவிலில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபட்டனர். மேலும் இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவர்.