பொதுமக்களின் வசதிக்காக பன்னாட்டு வானுர்தி நிலையத்தில் பேட்டரி வாகன வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் வயதானவர்கள், மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் வசதிக்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கிடையே பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்த வாகன சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் இந்த வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வானுர்தி நிலையத்தின் தரைத்தளம் மற்றும் மேல்தளம் ஆகிய இரண்டிலும் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது மேல்தளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தரைத்தளத்தில் மட்டும் இயங்கி வருகிறது. இந்த வாகன சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.