இரண்டு வருடங்களுக்கு பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து வங்காளதேசத்தின் குல்னாவுக்கு பந்தன் விரைவு ரயில் 7:10 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா- டாக்கா இடையேயான மைத்திரி விரைவு ரயில் சேவையும் இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
மேலும் கொல்கத்தா பந்தன் விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்களும் கொல்கத்தா டாக்கா மைத்ரி விரைவு ரயில் வாரத்தின் 5 நாட்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா வங்காளதேசம் இடையேயான ரயில் இணைப்பை அதிகரிக்கும் விதமாக வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி முதல் மேற்கு வங்காளத்தின் பொது ஜல்பைல்குரியில் இருந்து டாக்காவுக்கு மித்தாலி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிழக்கு ரயில்வே அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.