கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பின் மெக்காவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கொரோனா பரவாலால் கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹச் பயணத்திற்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த முறை அதில் ஓரளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழும் தடுப்பூசி செலுத்தி இருப்பதும் அவசியம் என கூறப்பட்டுள்ளது.