எத்தியோப்பிய அரசு திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.
எத்தியோப்பிய அரசாங்கத்தின் படை வீரர்களுக்கும், திக்ரேயன் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போர் நடைபெற்று வருகிறது.
இதனால் எத்தியோப்பிய அரசு திக்ரேயில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 56 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வான்வெளி விமான தாக்குதலில் 30 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்கள்.
இந்த தகவலை தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எத்தியோப்பிய அரசாங்கம் மறுத்துள்ளது.