Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 வருஷமா உயர்த்தல…. “சம்பளத்தை உயர்த்தனும்”…. தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு..!!

தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ராமமூர்த்தி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்துள்ளனர். அதில், வேலூர் மாவட்ட ஊராட்சி களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, நாங்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றோம். இதில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிகிறோம். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் எங்களுக்கு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |