மதுரை மாவட்டம் பேரையூருக்கு அருகில் உள்ள அத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவருடைய குடும்பத்தினர், இன்னும் இரண்டு வருடம் போகட்டும், உனக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்த பிறகு திருமணம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் வெறுப்படைந்த சுந்தரமகாலிங்கம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், சுந்தரமகாலிங்கம் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சாப்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.