விவசாயி ஒருவரின் வீட்டில் 2 வாயுடன் அதிசயமாக ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பக்கத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் சரவணன். விவசாயியான இவருடைய வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய ஆடு சம்பவத்தன்று இரவு ஆட்டு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த ஆட்டு குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. அதாவது2 வாய், 2மூக்கு, 2 நாக்கு, நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்துள்ளது .
இரு தலைகளுடன் ஆட்டுக்குட்டி பிறந்ததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அதிசயமாக கூட்டம் கூட்டமாக வந்த ஆட்டுகுட்டியை பார்த்து செல்கின்றனர். ஆட்டுக்குட்டிக்கு பால் புட்டியில் பால் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.