Categories
மாநில செய்திகள்

2 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் அடுத்த 2 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்து வரும் நிலையில், அடுத்த 2 வாரங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |