தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதனையடுத்து பணியிடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரி தலைமை ஆசிரியர்கள் இரண்டு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் அரசு மேல்நிலை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.