இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கௌசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கௌசல்யா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து கௌசல்யாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.