பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும்.
தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வராது. தயிரில் புரோட்டின் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாக தயிர் உதவும். தயிரை நேரடியாக தலையில் அப்ளை செய்தாலே பொடுகு, தலை வறட்சி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வாரத்தில் ஒரு முறை தயிரை தலைக்கு தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால், 2 வாரத்தில் தலைமுடி கருகருவென நீளமாக வளரும்.