இரண்டு சிறப்பு கட்டண ரயில்களின் சேவை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வேத்துறை பல புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் சிறப்பு கட்டண ரயில்களும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரம் – கர்நாடக மாநிலம் ஹூப்ளி, சென்னை சென்ட்ரல் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகா இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பயணிகளின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த ரயில்களின் சேவையை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நீட்டுத்து இயக்கப்பட உள்ளதாகவும் இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.