தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்ப தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் மாணவர்கள் ஜூலை 27ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பித்து வந்தனர்.
மாணவர்கள் இதற்கு விண்ணபிக்க நேற்றே கடைசி நாளாகும்.இந்நிலையில் நேற்று விண்ணப்பிக்க தவறியவர்கள் இன்று (28ஆம் தேதி) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.