Categories
சினிமா தமிழ் சினிமா

2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா பொன்னியின் செல்வன்…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த சரித்திர படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் 10 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் 150 கோடி வசூலை கடந்துள்ள இந்த படம் தற்போது வெளிநாடுகளிலும் 150 கோடி வசூலை கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. வெளிநாடுகளை பொருத்தவரையில் இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் மட்டும் தான் 150 கோடி வசூலை கடந்த படமாக இருந்தது. இந்த நிலையில் அந்த படம் வெளிநாடுகளில் மொத்தமாக 170 கோடி வரை வசூலித்திருக்கிறது.

தற்போது அந்த சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடிக்குமா என்பது அடுத்த கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யூனைடெட் கிங்டம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் அதிக வசூலை குவித்திருக்கின்ற முதல் தமிழ் படம் எனும் பெருமையை பொன்னியின் செல்வன் திரைப்படம் நிகழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் தமிழ் படங்களுக்கு அதிக வசூலை பெற்று தரும் அமெரிக்காவில் பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் தமிழ் படங்களுக்கான காட்சிகளும் அதற்கான ரசிகர்கள் ரசிகர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே படம் வெளியான வார சனி மற்றும் ஞாயிறு, கடந்த வார சனி மற்றும் ஞாயிறு போன்ற இரண்டு வார நாட்களில் பொன்னியின் செல்வன் படம் அதிக வசூலை பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் வரும் வார நாட்களிலும் இந்த படத்திற்கு சிறப்பான வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |