வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்திரவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு விளாங்குறிச்சி பகுதியில் ரகுநாதன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 2 1/2 வயது பெண் குழந்தைக்கு ரகுநாதன் பாலியல் தொந்தரவு அளித்து பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரகுநாதனை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ரகுநாதனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாலியல் ரீதியாக குழந்தையை துன்புறுத்திய குற்றத்திற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.