Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனாவில் ”2.28 இலட்சம் பேர்” குணமடைந்தனர் …..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதித்த 228,038 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது உலக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

Coronavirus live updates: Italy overtakes China's death toll ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,087,374 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,392 பேர் உயிரிழந்துள்ளனர். 228,038 பேர் குணமடைந்த நிலையில் 800,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Spain extends coronavirus lockdown as death toll mounts - The ...

கொடூர கொரோனாவால் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தாலும், 228,038 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது உலக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சீனாவில் 76,571 பேரும், ஸ்பெயினில் 30,513 பேரும், 24,575 ஜெர்மனியில் 24,575 பேரும், இத்தாலியில் 19,758 பேரும், ஈரானில் 17,935 பேரும், பிரான்ஸ்ஸில் 14,008 பேரும், அமெரிக்காவில் 12,044 பேரும் குணமடைந்துள்ளனர்.

Categories

Tech |