Categories
மாநில செய்திகள்

“வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் திட்டம்” 2.33 லட்சம் பேர் சரிபார்ப்பு… தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்திம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல்அதிகாரி வாக்காளர் பட்டியலில் 18,000 பேர் பெயர் திருத்தம் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்காக மகளிர் திட்ட மேலாண்மை ஆலோசனை மேற்கொண்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Image result for தலைமை தேர்தல் அதிகாரி

மகளிர் குழுக்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த இரண்டு பேருக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து மற்ற ஊழியர்களின் பெயர் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Categories

Tech |