Categories
கிரிக்கெட் விளையாட்டு

2, 6, 6, 6, 4, 6…. ஒரே ஓவரில் சரவெடி….. 30ரன் எடுத்த பேட் கம்மின்ஸ்…. நொந்து போன சுட்டி குழந்தை …!!

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒருவருக்கு 3 விக்கெட் இழப்புக்கு 220 குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்64ரன்னும், பாப் டூ ப்ளசிஸ் 95ரன்னும் ரன்கள் குவித்து அசத்தினர்.

கொல்கத்தா அணி சார்பில் வருன் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரூ ரசூல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 221 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நிதீஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், சுனில் நரைன் என 5 முன் வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு வெறும் 31 ரன்னுடன் கொல்கத்தா அணி திணறிக்கொண்டு இருந்தது.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் – ஆண்ட்ரே ரசல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் ரன்களை சேர்த்தது. ஆண்ட்ரே ரசல் 22 பந்துகளில் 54 ரன்கள் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் விக்கெட்டை தொடர்ந்து சென்னை அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக பேட் கம்மின்ஸ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

சென்னையின் வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல என்று பந்துவீச்சாளர்களை நடுங்க வைத்தார். 34 பந்துகளை சந்தித்த அவர் 66 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் மற்ற அனைத்து வீரர்களும் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 5 பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது.

சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சஹர் 4 விக்கெட்டுகளையும், நெகிடி 3 விக்கெட்டுகளையும், சம் கர்ரன் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தப்போட்டியில் 16வது ஓவரை சம் கர்ரன் வீச எதிர்முனையில் நின்ற பேட் கம்மின்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சம் கர்ரன் ஓவரில் ( 2, 6, 6, 6, 4, 6 ) என ஒரே ஓவரில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் அடித்து அசத்தினார்.

Categories

Tech |