முதியவரை தாக்கிய 2 அ.தி.மு.க. பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரகாசபுரம் பகுதியில் கமலசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரில் வசிக்கும் ராம்கோபாலன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலசேகர் நாசரேத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம்கோபாலனுக்கும் கமலசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராம்கோபாலன் அவரது நண்பர் சாது இம்மானுவேல் ஆகிய 2 பேரும் கமலசேகரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து கமலசேகர் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்கோபாலன் மற்றும் சாது இம்மானுவேல் ஆகிய 2 போரையும் கைது செய்துள்ளனர்.