Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழக்கடையில் நடந்த சூழ்ச்சி…. சுதாரித்துக் கொண்ட பழவியாபாரி…. கைது செய்த காவல்துறை….!!

கள்ளநோட்டுகளை பழக்கடையில் மாற்ற முயன்ற போது இரண்டு பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கமலாபுரம் பகுதியில் சந்தனமேரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நான்கு வழி சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு பழம் வாங்குவதற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில பழங்களை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ளநோட்டை சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர்.

அந்த நோட்டை பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்துக் அவர்களிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சந்தனமேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார். பின்னர் அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அந்த இரண்டு பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 30ம், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 ம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி சூர்யா மற்றும் நாகரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |