Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும் படி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கார்த்திகேயன் மற்றும் சூரத் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த 3-ஆம் தேதி அரசு ஆணை மேல்நிலைப் பள்ளியின் எதிரே இருக்கும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இந்திரா நகர் பகுதியில் மெக்கானிக் கடையின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் திருடியதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் சூரத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |