Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

லாரியை வழிமறித்த 2 நபர்கள்…. கொடூரமாக தாக்கப்பட்ட 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் இரண்டு பேர்….!!

லாரியை வழிமறித்து இரண்டு பேரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டி பகுதியில் தீன்முகம்மது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பரான முத்துவேல் என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் டேங்கர் லாரியில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருக்கும்போது அற்புதபுரம் பகுதியில் செந்தில்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் லாரியை வழிமறித்து தீன்முகம்மது, முத்துவேல்  இரண்டு போரையும் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |